மாவட்ட செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை + "||" + Teen commits suicide by drinking poison

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுடைய மகள் மகேசுவரி (வயது 26). இவர் அரசு பணிக்கு தயாராகும் வகையில், தட்டச்சு பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவேல் இறந்து விட்டார். பின்னர் தாயாருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மகேசுவரி தனது வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்தார். இதனால் மனமுடைந்த மகேசுவரி சம்பவத்தன்று வீட்டில் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மகேசுவரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆறுமுகநேரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
வள்ளியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மானூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.