ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கு எதிராக சட்டப்பிரிவுகள் உள்ளதா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கு எதிராக சட்டப்பிரிவுகள் உள்ளதா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2021 2:14 AM IST (Updated: 28 Aug 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கு எதிராக சட்ட பிரிவுகள் உள்ளதா? அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசு கால்நடை இனப்பெருக்க சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில் பல்வேறு பாதகமான விதிகள் உள்ளன. குறிப்பாக, காளைகள் அனைத்தையும் பதிவு செய்து தகுதிச்சான்று பெற வேண்டும். செயற்கையான கருவையே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை இந்த சட்டம் கூறுகிறது.எனவே கால்நடை இனப்பெருக்க சட்டம் விவசாயிகளுக்கும், மாட்டு இன பாதுகாப்பாளர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் உள்ளிட்ட பலருக்கும் பாதகமாக உள்ளதால் அது தொடர்பான கால்நடை இனப் பெருக்க சட்ட பிரிவுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இது குறித்து சட்டத்துறையிடம் விளக்கம் பெற வேண்டி இருக்கிறது என்று கூறினார்.இதையடுத்து, மேற்கண்ட சட்டப்பிரிவுகள் குறித்து சட்டத்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story