திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள நக்கலகோட்டையை சேர்ந்த பாண்டி மனைவி ஜோதிலட்சுமி (வயது 55). பாண்டி ஏற்கனவே இறந்துவிட்டார். ஜோதிலட்சுமி தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்து வேலைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய ஜோதிலட்சுமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.