லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை


லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 27 Aug 2021 9:05 PM GMT (Updated: 2021-08-28T02:35:11+05:30)

வரதட்சணை கொடுமை வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மதுரை,

மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமர். லாரி டிரைவர். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த வைரமணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்தனர். பின்னர் இருவரும் தனியாக குடித்தனம் இருந்தனர்.
இந்த நிலையில் தனது மனைவி அணிந்திருந்த நகைகளை வாங்கி ராமர் அடகு வைத்து மது குடித்து செலவு செய்துள்ளார். மீண்டும் மனைவியை அவரது பெற்றோரிடம் நகை கேட்டு வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளார்.இதனை அறிந்த பெண்ணின் தந்தை காசிமாயன் செல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.முடிவில் ராமர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன்மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story