மதுரை,
மதுரை மீனாட்சிபுரம், ஏசுநாதர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 62). சம்பவத்தன்று இரவு இவர் பேத்தியை அழைத்து கொண்டு குலமங்கலம் ரோட்டில் உள்ள மருந்துக்கடைக்கு நடந்து சென்றார். அங்கு மருந்து வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அதிலிருந்து ஒருவன் கீழே இறங்கி வந்து ஜெயக்கொடி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். இது குறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.