திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்
x
தினத்தந்தி 28 Aug 2021 6:08 PM IST (Updated: 28 Aug 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பெரிய மனோபுரம் கிராமத்தில் வசித்து வரும் புகைப்பட கலைஞர் யுகேந்தர் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில ்சிமெண்டால் ஆன மேற்கூரை சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Next Story