காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு
x
தினத்தந்தி 28 Aug 2021 6:59 PM IST (Updated: 28 Aug 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மருத்துவ பணியாளர்கள் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு விவர பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாள்தோறும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற எத்தனை பேர் வந்து செல்கின்றனர், உள்நோயாளிகளாக எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தடுப்பூசி போடும் பணி உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார். ஆஸ்பத்திரியின் தேவைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மருத்துவ அலுவலர் ராஜேந்திர பிரசாத், மருத்துவர் பூர்ணிமா உள்ளிட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Next Story