சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு


சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 3:06 PM GMT (Updated: 28 Aug 2021 3:06 PM GMT)

சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு

துடியலூர்

சுதந்திர தினத்தையொட்டி,  அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை வலியுறுத்தி கன்னியகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படை சார்பில் 2850 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பயணம் தொடங்கி உள்ளது. 

இதில் ஒரு சி.ஆர்.பி.எப். கல்லூரி வீரர்கள் 15 பேர் அடுத்த சி.ஆர்.பி.எப் கல்லூரி வரை சைக்கிள் பயணம் செய்வார்கள். 

அதன்பிறகு அந்த கல்லூரி வீரர்கள் அதே சைக்கிளில் பயணத்தை தொடர்வார்கள். இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று டெல்லி ராஜ்காட்டை சென்றடைகிறார்கள். 

இந்த சைக்கிள் பயண வீரர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் தொடங்கி கேரளா வழியாக கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படை பயிற்சி கல்லூரிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

 அவர்களை கோவை மத்திய பாதுகாப்பு படை பயிற்சி கல்லூரி முதல்வர் சதீஷ் சந்திர வர்மா பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று பெங்களூருவுக்கு புறப்பட்ட சைக்கிள் பயணத்தை சதீஷ் சந்திர வர்மா தொடங்கி வைத்தார். 

அவர்களை உற்சாகப்படுத்த சென்ற 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சி.ஆர்.பி.எப். கல்லூரி சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story