சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Aug 2021 10:04 PM IST (Updated: 28 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி லோகநாயகி (வயது 54). இவர்களுக்கும், நாகூரை சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன்புதூரை சேர்ந்த கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பவதன்று அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த லோகநாயகியை, கதிர்வேல், துரைசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கி, தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் துரைசாமி, கதிர்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story