கிணத்துக்கடவு பகுதியில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை


கிணத்துக்கடவு பகுதியில்  310 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 Aug 2021 4:37 PM GMT (Updated: 2021-08-28T22:07:24+05:30)

கிணத்துக்கடவு பகுதியில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இதன்படி நேற்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 310 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், ஆசிரியர்கள் என 26 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story