14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது


14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 28 Aug 2021 8:00 PM GMT (Updated: 2021-08-29T01:30:07+05:30)

உசிலம்பட்டி அருகே 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி புதுநகரைச் சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவர் வனப்பகுதியை ஓட்டி உள்ள தனது தோட்டத்தில் தற்போது கப்பை கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்த கப்பை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் போது பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உசிலம்பட்டி சிவாலயம் திருப்பணிக்குழு நண்பர்களுக்கு பாண்டி தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து விரைந்து வந்த பிரேம்குமார் தலைமையிலான சிவாலயம் திருப்பணிக்குழு நண்பர்கள் கப்பை செடிகளுக்குள் பதுங்கி இருந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நேற்று மாலை பத்திரமாக மீட்டனர்.பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
========

Next Story