தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2021 8:03 PM GMT (Updated: 2021-08-29T01:33:20+05:30)

திருமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மகன் பால்பாண்டி (வயது28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் இவர் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது பால்பாண்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story