கண்மாயில் மூழ்கி மாணவன் பலி


கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 1:36 AM IST (Updated: 29 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானான்.

திருப்பரங்குன்றம்,

மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் ஜீவன் (வயது 14) இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவலால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி ஜீவன் தனது நண்பர்களுடன் மதுரை மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்க சென்றான். இந்த நிலையில் ஜீவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story