லாரியில் டீசல் திருடியவர் கைது


லாரியில் டீசல் திருடியவர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 2:33 AM IST (Updated: 29 Aug 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடி அருகே லாரியில் டீசல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம்,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் குமரன். லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை விருதுநகரில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி பிரிவில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் லாரியில் இருந்து டீசல் திருட முயற்சி செய்தனர். திடீரென லாரியில் இருந்து சத்தம் வருவதை கேட்டு எழுந்த குமரன் இறங்கி பார்த்தபோது 3 மர்ம நபர்கள் டீசல் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் டீசல் திருடிய கார் டிரைவர் நிலக்கோட்டை தாலுகா கல்லடிபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என தெரியவந்தது. அவரை கைது செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story