திருவள்ளூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்கம்


திருவள்ளூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2021 5:37 PM IST (Updated: 29 Aug 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி, கூவம், களாம்பாக்கம் போன்ற ஊராட்சிகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து நெல் கொள்முதல் செய்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணை தலைவர்கள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, புதுமாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பாண்டியன், துணைத்தலைவர் சிவகுமார், களாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முரளி, கூவம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை கமல், ஒன்றிய கவுன்சிலர் சுபப்பிரியா சக்திதாசன், கடம்பத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், காஞ்சிபாடி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story