நன்னடத்தை ஆணையை மீறியவருக்கு 329 நாட்கள் சிறை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க, சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சீபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியை சேர்ந்த, முகேஷ் என்ற சுபாஷ் (26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஜூலை 23-ந்தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல்லவர்மேட்டை சேர்ந்த செந்தில்குமார் கொலை வழக்கில் முகேஷ் மீது சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் அடைக்கப்பட்டார். முகேஷ் நன்னடத்தை ஆணையை மீறிய குற்றத்திற்காக 329 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story






