சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை ஏரி, குளம், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை ஏரி, குளம், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 9:15 PM IST (Updated: 29 Aug 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை ஏரி, குளம், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல் சோளிங்கர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அதில் காவேரிப்பாக்கம், நிமிலி பகுதியில் அதிகப்பட்சமாக 53 மில்லி மீட்டர் மழை பெய்தது. சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பலத்த மழையால் சோளிங்கர் மற்றும் சுற்று வடடாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அரக்கோணம்- 12.8, ஆற்காடு-9.1, வாலாஜா-12.2, அம்மூர்-34, கலவை-25.6. 

Next Story