ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கோவையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கோவை
கோவையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா பரவல்
கோவை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதற்காக மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகிற 5-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு 1,23,500 கோவிஷீல்டு, 19,440 கோவேக்சின் என மொத்தம் 1,42,940 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
77 பேருக்கு தடுப்பூசி
இதில் 68,700 கோவிஷீல்டு, 8,350 கோவேக்சின் என மொத்தம் 77,050 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. கோவை ஊரக பகுதியில் 22,600 தடுப்பூசிகளும், மாநகராட்சி பகுதியில் 16,500 தடுப்பூசிகளும் செலுத்தப் பட்டன.
காலையில் லேசாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 24 மணி நேர தடுப்பூசி மையங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 77 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் சூலூர் அடுத்த காடம்பாடி ஊராட்சி அரசுப் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 77 ஆயிரத்து 50 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 65,890 தடுப்பூசி நாளை (இன்று) போடப்படும் என்றார்.
கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகியவற்றில் 24 மணி நேர தடுப்பூசி மையம் திறக்கப்பட்டு உள்ளது.
தற்போது கூடுதலாக பொள்ளாச்சி, மேட்டுப்பாளை யம், மதுக்கரை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், வால் பாறை, சூலூர், கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர், கோட்டூர், சுண்டக்காமுத்தூர், கோலார்பட்டி, வேட்டைக்காரன்புதூர் ஆகிய 13 அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த மையம் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் 24 மணி நேர மையம் 15 ஆக அதிகரித்து உள்ளது. இந்த மையங்களிலும் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story