கிராம விவசாயிகள் பங்கேற்க வேண்டும்
கிராம விவசாயிகள் பங்கேற்க வேண்டும்
கோவை
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர், ராஜ்விந்தர் சிங், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
இவர் விவசாய சங்கங்களிடம் பேசி போராட்டத்துக்கு ஆதரவாக விசாயிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கோவையில் உள்ள கல்லூரியில்தான் படித்தேன் என்ப தால் தமிழ் பேச தெரியும். எனவே விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறேன்.
நமது நாட்டில் 6½ லட்சம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து தலா ஒரு விவசாயிகள் பங்கேற்றால்கூட 6½ லட்சம் விவசாயிகள் கூட முடியும். எனவே கிராம விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான உணவு பொருட்கள் தயாராக உள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story