நாய் கடித்ததில் மயில் குஞ்சு இறந்தது


நாய் கடித்ததில் மயில் குஞ்சு இறந்தது
x
தினத்தந்தி 29 Aug 2021 4:38 PM GMT (Updated: 2021-08-29T22:08:54+05:30)

நாய் கடித்ததில் மயில் குஞ்சு இறந்தது

துடியலூர்

துடியலூர் அருகே உள்ள என்.ஜி. ஜி. ஓ. காலனி மற்றும் சுற்றி உள்ள பகுதியில் அதிக மயில்கள் உள்ளன. இதில் ஸ்டேட் வங்கி காலனியில் ஒரு மயில் 4 குஞ்சுகளுடன் சுற்றியது. 

இந்த நிலை யில் அங்கு வந்த தெருநாய், அதில் ஒரு குஞ்சுவை கடித்தது. உடனே தாய் மயில் துரத்தியதும், அந்த குஞ்சுவை கீழே போட்டு விட்டு நாய் ஓடியது. 

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் படுகாயம் அடைந்த மயில் குஞ்சுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இருந்த போதிலும் அந்த குஞ்சு இறந்தது. அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மயில் குஞ்சுவின் உடலை எடுத்துச்சென்றனர். 


Next Story