கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை


கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 29 Aug 2021 6:17 PM GMT (Updated: 29 Aug 2021 6:17 PM GMT)

கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

திருவட்டார்:
திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாமியார்மடத்தில் கஞ்சிமடம் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு 8.30 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று அதிகாலையில் கோவிலுக்கு சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் தலைவர் சுரேஷ்குமார் என்ற உண்ணி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story