போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே துப்பாக்கி சுடும் போட்டி
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் நேற்று நடந்தது.
மதுரை,
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டிகள் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் நேற்று நடந்தது.
துப்பாக்கி சுடும் போட்டி
இதில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.க்கள், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மதுரை, பழனி, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட்கள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சூப்பிரண்டுகள், மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-ம் அணி கமாண்டன்டு தேஷ்முக் சேகர் 2-ம் இடத்தையும், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்ரே பிரவீன் உமேஷ், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
மாநில அளவில்...
இதே போல் மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக உயரதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் 3 இடங்களை பெறும் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.
Related Tags :
Next Story