மதுரை,
மதுரை செல்லூர் போலீசார் மேலதோப்பு எம்.ஜி.ஆர். பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, போலீசாரை கண்டதும் காரில் இருந்த வில்லாபுரத்தை சேர்ந்த ஹாஜிஅலி, விஜயகுமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அதன்பின்னர் போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 280 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தி வரப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.