சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. சிலை


சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. சிலை
x
தினத்தந்தி 30 Aug 2021 2:42 AM IST (Updated: 30 Aug 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சார்பில் சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி.சிலையை அமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை,

தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மதுரை சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்ராஜ்பிள்ளை, பொருளாளர் பெரியசாமி பிள்ளை ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு புதிய வெண்கல சிலையை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பூமிநாதன் எம்.எல்.ஏ., வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம்பிள்ளை ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் இளைஞரணித் தலைவர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில், சோமசுந்தரம், கோபி, செந்தில்குமார், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story