பெண்ணிடம் மோசடி:அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது வழக்கு


பெண்ணிடம் மோசடி:அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Aug 2021 2:47 AM IST (Updated: 30 Aug 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை அப்பன்திருப்பதி பகுதியை சேர்ந்த ரம்யா (வயது 24) என்பவர் திருப்பாலை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், புதூர் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ரூபன்ராஜ் மற்றும் அரசு டிரைவர் ஒருவருக்கு கடனாக ரூ.6 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை. அதனைக் கேட்ட போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்வதாக மிரட்டினர். எனவே அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து திருப்பாலை போலீசார், ரூபன்ராஜ் உள்ளிட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story