வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவிலில் தணிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது. இதில் கோவில் செயல் அலுவலராக சிந்துமதி என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் ரூ.14 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதையொட்டி அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், அறநிலையத்துறையை சேர்ந்த தணிக்கை குழுவினர் ஒருவாரமாக இந்த கோவிலில் தணிக்கை செய்து வந்தனர். தணிக்கையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
பணியிடை நீக்கம்
இதையடுத்து வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் சிந்துமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் எந்தனை ரூபாய் முறைகேடு நடந்தது என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார். கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையொட்டி இந்த கோவிலுக்கு புதிய செயல் அலுவலராக நற்சோணை நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story