காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர் ஊராட்சி கிளை செயலாளர் டி. தமிழ்அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். பொதுமக்களுடன் வரிசையில் நின்று வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது ஊராட்சி செயலர் இதயராஜ் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story