பக்கிங்காம் கால்வாயில் கார் கவிழ்ந்து 2 பேர் காயம்


பக்கிங்காம் கால்வாயில் கார் கவிழ்ந்து 2 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Aug 2021 6:15 PM IST (Updated: 30 Aug 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஒரு காரில் 2 பேர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்போரூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பேரூர் பக்கிங்காம் கால்வாய் வளைவு பகுதியில் அதிவேகத்தில் திரும்பும்போது திடீரென நிலைதடுமாறி பக்கிங்காம் கால்வாயில் பாய்ந்து தண்ணீரில் தத்தளித்தது.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர். காரில் இருந்து மீட்கப்பட்ட இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அபாயகரமாக உள்ள பேரூர் வளைவு பகுதியில் இதுவரை பல வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வளைவு பகுதியில் தகடுடன் கூடிய பாதுகாப்பு கம்பி அமைக்காததே விபத்துக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story