ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 9:03 PM IST (Updated: 30 Aug 2021 9:03 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி: 

தேனி பங்களாமேட்டில் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், அனைத்து இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அகமது ஆடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். 

ஆர்ப்பாட்டத்தின்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story