சிறுவாணி அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு
கோவை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் சிறுவாணி அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்து உள்ளது.
சிறுவாணி அணை
கோவை மாநகர பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள வனப்பகுதியில் இருக்கும் இந்த அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த பரவலான மழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி 28 அடியாகவும், 23-ந் தேதி 30 அடியாகவும், 24-ந் தேதி 33 அடியாகவும் அதிகரித்தது. பின்னர் மழை குறைந்தது. எனவே அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
34 அடியாக உயர்வு
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், குடிநீருக்காக தினமும் 90 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.
Related Tags :
Next Story