கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 30 Aug 2021 11:27 PM IST (Updated: 30 Aug 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சாமிக்கு லட்டு, அதிரசம், தட்டைமுறுக்கு உள்ளிட்ட பொருட்கள் படையலிட்டு வழிபாடு நடந்தது. இதற்கிடையில் கொரோனா காரணமாக கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையில் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை பகுதிகளில் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதா வேடம் அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை அக்கம், பக்கத்தினருக்கு வழங்கி கொண்டாடினர்.

Next Story