போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறு தனியார் நிறுவன அதிகாரி கைது


போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறு தனியார் நிறுவன அதிகாரி கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 8:33 PM GMT (Updated: 2021-08-31T02:03:30+05:30)

பெருந்துறையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசாா் கைது செய்தனா்.

பெருந்துறை
பெருந்துறை போக்குவரத்து போலீசில் தலைமை போலீசாராக பணியாற்றி வருபவர் பூங்கோதை (வயது 35). கடந்த 27-ந் தேதி இரவு பெருந்துறை குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்துகளை பூங்கோதை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது ஈரோடு ரோட்டில் இருந்து குன்னத்தூர் ரோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் அங்கு நின்று கொண்டு வாகன போக்குவரத்தை கண்காணித்து கொண்டிருந்த பெண் போலீசான பூங்கோதையை தகாத வார்த்தையால் திட்டியதுடன், தகராறிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. 
இதுகுறித்து பெருந்துறை போலீசில் பூங்கோதை புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் பெருந்துறை குன்னத்தூர் ரோடு செல்லம் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பதும், அவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்டதாக ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.  

Related Tags :
Next Story