கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை


கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 31 Aug 2021 2:07 AM IST (Updated: 31 Aug 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தென்திசை நோக்கி காலபைரவருக்கு மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில் காலபைரவர் செவ்வரளி மலர் அலங்காரத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குட்லாடம்பட்டி கண்மாய் அருகில் 36 அடி உயர அண்ணாமலையார் கோவிலில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் அன்னதானம் நடந்தது. இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் மற்றும் அண்ணாமலையார் அறக்கட்டளையினர் செய்தனர்.
சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு அர்ச்சனை நடந்தது. அப்போது பக்தர்கள் காலபைரவருக்கு, தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர் பூசணிக்காய், தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி, கால பைரவரை வழிபட்டனர்..இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி மதுரை எஸ்.ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் உள்ள கால பைரவரும், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story