உண்டியலை உடைத்து பணம் திருட்டு


உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 Aug 2021 2:08 AM IST (Updated: 31 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பேரையூர்
திருமங்கலம் தாலுகா எஸ்.வலையபட்டியில் சபரிமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக இருப்பவர் பெரிய ஒச்சான்(வயது 65), இவர் சம்பவத்தன்று இரவு கோவிலில் பூஜை முடித்து விட்டு சென்று விட்டார். காலையில் யாரோ மர்ம நபர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டதாக நாகையாபுரம் போலீசில் பூசாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் பேரையூர் அருகே எ.கிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவில், இக்கோவிலில் உள்ள உண்டியலை 2 மர்ம நபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி கொண்டிருந்தனர். அப்போது கோவில் அருகே படுத்திருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story