இறைச்சி கடைக்காரர் வீட்டில் திருட்டு


இறைச்சி கடைக்காரர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 8:38 PM GMT (Updated: 2021-08-31T02:08:08+05:30)

இறைச்சி கடைக்காரர் வீட்டில் திருட்டு

அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ரெங்கராஜபுரம் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (43). ஆட்டு இறைச்சி கடைகாரர். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த லேப்டாப், 3 கிராம் தங்க நகை, குத்துவிளக்கு, பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story