தடையை மீறி ஜல்லிக்கட்டு; 3 பேர் கைது


தடையை மீறி ஜல்லிக்கட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 8:38 PM GMT (Updated: 2021-08-31T02:08:40+05:30)

தடையை மீறி ஜல்லிக்கட்டு; 3 பேர் கைது

சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரியர்கள்  வலைதளம் மூலமாக ஜல்லிக்கட்டு மாடு வைத்திருப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களை தொடர்பு கொண்டு  அரசு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காடுபட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகவேல்(வயது 46), தர்மராஜ் மற்றும் மதுரையை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story