ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வாடிப்பட்டி
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் நேற்று மாலை 5.30 மணிக்கு திருத்தல அதிபர் அந்தோணி ஜோசப் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. 7-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. மேலும் இதன் முக்கிய விழாவான செப்டம்பர் 8-ந்தேதி புதன்கிழமை ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 21-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
9-ந்தேதி வியாழக்கிழமை காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் கொடி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப்அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.
மேலும் கொரோனா ஊரடங்கினால் இந்த ஆண்டு திருவிழா மக்கள் பங்கேற்பின்றியும் கொடிப்பவனி, நற்கருணைப்பவனி, சப்பரப்பவனி ஆகியவை நடைபெறாது. அரசு விதித்துள்ள வழிமுறைகளை கடைபிடித்து நடத்திடவும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லாததால் வீட்டிலிருந்தே வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story