பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2021 8:40 PM GMT (Updated: 2021-08-31T02:10:28+05:30)

பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டி.என்.பாளையம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
அதன்படி கோபி வட்டம், வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 இதனால் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது. கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

Next Story