ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 129 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 129 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 Aug 2021 8:58 PM GMT (Updated: 2021-08-31T02:28:51+05:30)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானாா்கள். புதிதாக 129 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 132 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 280 ஆக உயர்ந்தது. இதில் 96 ஆயிரத்து 206 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 159 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். தற்போது 1,418 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் கடந்த மே மாதம் 12-ந் தேதியும், 66 வயது மூதாட்டி கடந்த 27-ந் தேதியும், 63 வயது முதியவர் 28-ந் தேதியும் இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 656 ஆக உயர்ந்தது.

Next Story