கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு


கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 9:54 PM IST (Updated: 31 Aug 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய மறுப்பதால் வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வால்பாறை

சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய மறுப்பதால் வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

குவியும் சுற்றுலா பயணிகள் 

மலைப்பகுதியான வால்பாறையில் கொரோனா பரவல் கட்டுப் படுத்தப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவித்ததால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் வால் பாறை பகுதி மீண்டும் களை கட்டி உள்ளது. 

கொரோனா பரவும் அபாயம் 

இந்த நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான வர்கள் முகக்கவசம் அணிவது இல்லை. அத்து டன் அவர்கள் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது, கைகழுவும் திரவங்கள் பயன்படுத்துவது கிடையாது. 

அதுபோன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை நாளில் இங்கு வரும் பொதுமக்களும் முகக்கவசம் அணிவது இல்லை. 

இவ்வாறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை யாரும் கடைபிடிக்காமல் இருப்பதால் வால்பாறையில் தொற்று பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-  

பின்பற்றுவது இல்லை 

சுற்றுலா மையமான வால்பாறையில் லேசான மழை சாரல் இருப்பதால் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். அவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை.

 அத்துடன் சமூக இடைவெளியையும் கடைபிடிப்பது கிடையாது. தற்போது வால்பாறையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் கொரோனா பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

கடும் நடவடிக்கை 

ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க தனிக்குழு நியமிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தடுப்பு நடவடக்கையை கடைபிடிக்கா தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அதுபோன்று வால்பாறையிலும் கண்காணிப்புக்குழு நியமித்து முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்போதுதான் வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story