லாரி மோதியதில் மின் கம்பம் முறிந்தது


லாரி மோதியதில் மின் கம்பம் முறிந்தது
x
தினத்தந்தி 31 Aug 2021 10:01 PM IST (Updated: 31 Aug 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சத்திரம் வீதியில் லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் விடிய, விடிய, இருளில் தவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சத்திரம் வீதியில் லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் விடிய, விடிய, இருளில் தவித்தனர்.

மின் கம்பம் சேதம்

பொள்ளாச்சி சத்திரம் வீதியில் வணிக நிறுவனங்கள், கடைகள் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இரவு கடைகளுக்கு சரக்கு இறக்குவதற்கு வந்த லாரி மின் கம்பம் மோதியது. 

இதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சத்திரம் வீதியில் மின் வினியோகம் நிறுத்தப் பட்டது. 

அத்துடன் வீடுகள், கடைகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.

சீரமைப்பு பணி

இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன. இதனால் இரவு 7 மணிக்கு மின்வினியோகம் சீரானது. 

Next Story