ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு


ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 31 Aug 2021 4:34 PM GMT (Updated: 2021-08-31T22:04:21+05:30)

காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொள்ளாச்சி

காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. 

இந்த நிலையில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அலுவலகங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

இதையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதேபோன்று பொள்ளாச்சி வடக்கு, ஆனைமலை ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஊராட்சி மன்ற தலைவர்

பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்குமாரபாளையம், திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், போளி கவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு, ஜமீன் முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

தென்குமாரபாளையம் ஊராட்சியில் ஆண்கள் 1421 பேரும், பெண்கள், 1541 பேரும் சேர்த்து மொத்தம் 2962 வாக்காளர் களும், திவான்சாபுதூர் ஊராட்சியில் ஆண்கள் 4140 பேரும், பெண்கள் 4415 பேரும் சேர்த்து மொத்தம் 8556 பேரும், போளி கவுண்டபாளையம் 4-வது வார்டில் ஆண்கள் 88 பேரும், பெண்கள் 94 பேரும் சேர்த்து 182 பேரும், ஜமீன்முத்தூர் 6-வது வார்டில் ஆண்கள் 313 பேரும், பெண்கள் 321 பேரும் சேர்த்து மொத்தம் 634 வாக்காளர்கள் உள்ளனர். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story