சப் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
சப் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
கோவை
கோவை கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டராக இருளப்பன், போலீஸ்காரராக ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் கோவை மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். மேலும் மாதந்தோறும் ரூ.1000 மாமூல் கேட்டுள்ள னர்.
சம்பவத்தன்று அய்யப்பனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது போலீஸ்காரர் ராஜ்குமாரையும், சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பனையும், போலீஸ்காரர் ராஜ்குமாரையும் பணியிடை நீக்கம் செய்து உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story