ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகள் திருட்டு


ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகள் திருட்டு
x
தினத்தந்தி 31 Aug 2021 8:32 PM GMT (Updated: 2021-09-01T02:02:08+05:30)

ஓடும் லாரியில் ரெடிமேட் துணிகள் திருட்டு

பேரையூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று லாரியில் மதுரையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தென்காசி சென்று லோடு இறக்குவதற்காக, டி.கல்லுப்பட்டி வழியாக சென்றார். டி.கல்லுப்பட்டியில் டீ குடிப்பதற்காக லாரியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது லாரியின் பின்னால் இருந்து 2 பேர் இறங்கி அங்கு தயாராக இருந்த மினி வேன் ஒன்றில் ஏறி தப்பி ஓடினார்கள். உடனே லாரி டிரைவர் வேல்முருகனும், கிளீனரும் லாரியில் ஏறி பார்த்தபோது தார்ப்பாய் கிழிக்கப்பட்டு லாரியில் இருந்த ரூ..47 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் திருட்டு போயிருந்தது. மேலும் திருடிய ரெடிமேட் துணிகளை மினி வேனில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் வேல்முருகன் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் லாரியில் ஏறி துணிகரமாக திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story