மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரையின்பேரில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் செல்வகுமார், அவைத்தலைவர் ராசு, வட்ட செயலாளர்கள் பொன்முருகன், திருநகர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் தனிக்கொடி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மாயி, முன்னாள் துணைத்தலைவர்கள் நெல்லையப்பபுரம் மணி, ஓச்சாத்தேவர், தனக்கன்குளம் நாகராஜன், நிலா சேகர். ரகுபதி, முன்னாள் கவுன்சிலர்கள் மரக்கடை முருகேசன், மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர் செயலாளர்கள் அழகுராஜா, குமார், மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர் பாசறை செயலாளர் பாலாஜி, கேட்டுக்கடை செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பேரவை துணை செயலாளர் துரை தனராஜன், கவுன்சிலர் சுதாகரன், பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அதேபோல் செல்லம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் பண்பாளன், கூட்டுறவு சங்க தலைவர் ரகு, மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி, கவுன்சிலர் பெருமாள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயலாளர் குரியர் கணேசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், நகரச் செயலாளர் முருகேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகளிரணி செயலாளர் லட்சுமி, நகர இளைஞரணி கேபிள்மணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் முனியாண்டி, மலைச்சாமி என்ற செழியன், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.கல்லுப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாவடியான், பேரையூர் நகர செயலாளர் நெடுமாறன், டி.கல்லுப்பட்டி நகர் செயலாளர் பால சுப்பிரமணி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story