காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்
காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் சிக்கினர்
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி போலீசார் ஒத்தக்கடை வளர்நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் வந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் அரசு தடை செய்த 109 கிலோ புகையிலை, பாக்கு இருப்பது தெரியவந்தது. உடனே காரில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் கீழச்சந்தை பேட்டை சேர்ந்த அக்பர்(வயது 23), முனிச்சாலை கான்பாளையம் ஆனந்தகுரு (30) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story