கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னிமலை
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன், பாசன சபை தலைவர்கள் கலைவாணன் (யு-9), கண்ணுசாமி என்கிற சதாசிவம் (எல்-11), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
* கீழ்பவானி பிரதான கால்வாயில் தரமற்ற கட்டுமானத்தை கட்டிய தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன், அந்த நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெளியேறிய தண்ணீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கோரிக்கை மனு
* கீழ்பவானி பாசன திட்டத்தில் நவீனப்படுத்துதல், சீரமைத்தல் என்ற பெயரில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கைகள் குறித்த மனுவை ஈரோடு கலெக்டர் மற்றும் அமைச்சர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் மற்றும் சென்னிமலை, காங்கேயம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒட்டவலசு ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story