குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, மான், நரி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து உள்ளதால் செடி, கொடிகள் துளிர்விட்டு பசுமையாக உள்ளன. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வெகுவாக நிரம்பி உள்ளன. இதனால் யானைகள் தண்ணீரை தேடி வனக்குட்டை பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளன. இந்தநிலையில் கடம்பூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட குன்றி வனப்பகுதியில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு நேற்று முன்தினம் யானைகள் குட்டிகளுடன் வந்தன. பின்னர் அவைகள் குட்டையில் இறங்கி குளித்து கும்மாளமிட்டன. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக யானைகள் குளித்து கும்மாளமிட்டன. அதன்பின்னரே வனப்பகுதிக்குள் சென்றன.
Related Tags :
Next Story