வெள்ளோடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னிமலை
சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு திருமணம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே கொம்மக்கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் மாதன். இவருடைய மகன் ஞானசேகரன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சென்னிமலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ஞானசேகரன் சிறுமியை திருமணம் செய்த தகவல் அந்த பகுதியில் பரவியது. மேலும் இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (சைல்டு லைன்) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
போக்சோவில் கைது
அதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொம்மக்கோவில் பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை அறச்சலூர் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல விடுதியில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story