தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை


தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Sep 2021 8:03 PM GMT (Updated: 2021-09-02T01:33:35+05:30)

காரியாப்பட்டி அருகே முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர்,

காரியாப்பட்டி அருகே முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காவலாளி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சோலை கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 73). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய உறவினர் துரைபாண்டி. இவர்கள் 2 பேரும் ஊர் அருகே மது குடித்து உள்ளனர். பின்னர் பிச்சை தனது இருசக்கர வாகனத்தின் சாவியை துரைபாண்டியிடம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

வெட்டிக்கொலை

பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அங்கு மீண்டும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த துரைபாண்டி அரிவாளால் பிச்சையை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறியபடியே உயிருக்கு போராடினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் துரைபாண்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
உயிருக்கு போராடிய பிச்சையை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மல்லாங்கிணர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story